முகப்பு
இந்தியா

இறப்புச் சான்றிதழுக்காக மக்களை அலைக்கழிப்பதா?: கமல்

மருத்துவமனைகளில் இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
கமல்ஹாசன் (கோப்புப்படம்)
பகிர்:

மருத்துவமனைகளில் இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, 

மருத்துவமனைகளில் இறந்தவர்களின் விவரங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவு செய்யாததால் இறப்புச் சான்றிதழ் கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். 

வங்கி முதலீடுகள், காப்பீடுகள் மற்றும் அரசின் நிவாரணங்களைப் பெற இந்தச் சான்றிதழ் அவசியம். இதனால், அரசு உடனடியாக இதைக் கவனிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →