ப.சிதம்பரம் 
இந்தியா

இடைத்தேர்தல் முடிவுகள் ஒரு பகுப்பாய் சிந்தனையை தூண்டுகிறது: ப.சிதம்பரம்

13 மாநிலங்களில் மூன்று மக்களவைத் தொகுதிகள், 29 பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலின் முடிவுகள் பற்றிய ஒரு பகுப்பாய் சிந்தனையை தூண்டும் வகையில் இருப்பதாக

DIN


சென்னை: 13 மாநிலங்களில் மூன்று மக்களவைத் தொகுதிகள், 29 பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலின் முடிவுகள் பற்றிய ஒரு பகுப்பாய் சிந்தனையை தூண்டும் வகையில் இருப்பதாகவும், காங்கிரஸ் வெற்றிக்கு பின்னால் புதிய வீசுவதாகவும் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

13 மாநிலங்களில் மூன்று மக்களவைத் தொகுதிகள், 29 பேரவைத் தொகுதிகளில் அக்.30-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில்  காங்கிரஸ், பிராந்திய கட்சிகள் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றன; பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை புதன்கிழமை குறைத்தது. இந்த நடவடிக்கை இடைத்தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. 

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில், 30 சட்டப்பேரவை தொகுதி மற்றும் 3 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் பற்றிய ஒரு பகுப்பாய் சிந்தனையை தூண்டும் வகையில் இருப்பதாகவும், காங்கிரஸ் வெற்றிக்கு பின்னால் புதிய வீசுவதாகவும் உள்ளன.அது வலிமையையும், வேகத்தையும் பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

மேலும், அடுத்த ஆண்டு சில மாநிலங்களில் நடைபெற உள்ள பேரவைத் தேர்தலில் காற்று எந்தப் பக்கம் வீசும் என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ள சிதம்பரம், அதிக வரிவிதிப்புகளால் எரிபொருள்கள் விலை அதிகமாக உள்ளது என்றும், ஆளும் மத்திய அரசின் பேராசையால்தான் எரிபொருள்கள் மீது அதிக வரி விதிக்கப்படுகிறது என்று நாங்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது என்று சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச மனைப் பட்டா கேட்டு புதுச்சேரி ஆட்சியரிடம் கம்யூ. மனு

விவசாயிகளுக்கு ஸ்மாா்ட் அடையாள அட்டை

ராஜ்பவன் தொகுதியில் ரூ.16 கோடியில் குடிநீா் குழாய்கள் பதிக்கும் திட்டப் பணி: முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

சென்னை ஒன் செயலியில் ரூ.1000, ரூ.2000-க்கான பயண அட்டை: அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்

பெரும்பாலான கூட்டுறவு நிறுவனங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை: எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா

SCROLL FOR NEXT