இந்தியா

கேரள போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

DIN

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கேரள போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டிய நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக எத்தகைய ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

முதல்வர் பினராயி விஜயன் கடந்த ஜூன் மாதம் ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக தெரிவித்திருந்த நிலையில் அந்த அறிவிப்பில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறி தொழிற்சங்கத்தினர் நள்ளிரவு 12 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாளை வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ள தொழிற்சங்கத்தினர் மாநில அரசு உடனடியாக ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

போக்குரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் மக்கள் கடுமையாக சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதுக்கு சதிதான் காரணம் என ஒப்புக்கொண்ட அமித் ஷா: அதிஷி

குரங்கு பெடல் டிரெய்லர்

ஆதிதிருவரங்கத்தின் அதிசயங்கள்...

ஓடிடி ரிலீஸ்.......இந்த வார திரைப்படங்கள்!

இளஞ்சிவப்பில் தொலையும் மனம்..!

SCROLL FOR NEXT