அந்தமான்-நிகோபார் தீவுகளிலிருந்து கிடைத்திருக்கும் நல்ல செய்தி 
இந்தியா

அந்தமான்-நிகோபார் தீவுகளிலிருந்து கிடைத்திருக்கும் நல்ல செய்தி

அந்தமான் - நிகோபார் யூனியன் பிரதேசத்தில் இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கரோனா பதிவாகவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

DIN


போர்ட் பிளேயர்: அந்தமான் - நிகோபார் யூனியன் பிரதேசத்தில் இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கரோனா பதிவாகவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அங்கு இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,659 ஆக உள்ளது. இவர்களில் 7,520 பேர் குணமடைந்துவிட்டனர். 129 பேர் பலியாகியுள்ளனர். 

நேற்று புதிதாக யாருக்கும் கரோனா உறுதி செய்யப்படாத நிலையில் வியாழக்கிழமை ஒருவருக்கும், புதன்கிழமை புதிய பாதிப்பு இல்லாமலும், செவ்வாயன்று 4 பேருக்கும், திங்களன்று மூவருக்கும், ஞாயிறன்று பூஜ்யமாகவும் இருந்தது.

அந்தத் தீவுக் கூட்டங்களில், இன்றைய நிலவரப்படி 10 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அனைவரும் தெற்கு அந்தமான் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். வடக்கு மற்றும் மத்திய அந்தமான் - நிகோபார் மாவட்டங்கள் முற்றிலும் கரோனா இல்லாத பகுதிகளாக உள்ளன.

அந்தமான் - நிகோபார் தீவுகளில் இதுவரை 5,00,758 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி - (தெலுங்கு) டிரெய்லர்!

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

SCROLL FOR NEXT