இந்தியா

பிகார்: கள்ளச்சாராயம் குடித்து 40 பேர் பலி

DIN

பிகாரில் கடந்த சில நாட்களில் கள்ளச் சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 40-யைக் கடந்திருக்கிறது.

பிகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பதால் பெரும்பாலான பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது.முக்கியமாக  கோபால்கஞ்ச் மற்றும் மேற்கு சாம்பரன் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

தற்போது பேட்டையா மாவட்டத்தில் கள்ளச்சாரயம் அருந்திய 4 பேர் பலியாகியுள்ளனர். இதனால், கடந்த 3 நாட்களில் மட்டும் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

தடையை மீறி கள்ளச் சாராயத்தைத் தயாரித்தவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பிகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறியதற்காக காவல் நிலைய பொறுப்பாளர்கள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இதுவரை 187 லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT