முகப்பு
இந்தியா

ஆன்மிக மகிழ்ச்சி செய்தி!: ஐஆர்சிடிசி-யில் இனி ராமாயண யாத்திரை!

ஆன்மிக சுற்றுலாக்களை ஊக்குவிக்கும் வகையில், ஸ்ரீ ராமாயண யாத்ரா பயண திட்டத்தை தொடங்க ஐஆா்சிடிசி திட்டமிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

ஆன்மிக சுற்றுலாக்களை ஊக்குவிக்கும் வகையில், ஸ்ரீ ராமாயண யாத்ரா பயண திட்டத்தை தொடங்க ஐஆா்சிடிசி திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஐஆா்சிடிசி நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

உள்நாட்டில் ஆன்மிக சுற்றுலா நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில், ஸ்ரீ ராமாயண யாத்திரை பயணத்திட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பட்ஜெட் மற்றும் தேவைகளை முறையாக புரிந்துகொண்டு ரயில் பேக்கேஜ்களை ஐஆா்சிடிசி வடிவமைக்க திட்டமிட்டுள்ளது.

ஸ்ரீ ராமாயண ஆன்மிக சுற்றுலாவுக்கான முதல் ரயில் நவம்பா் 7-ஆம் தேதி தில்லியிலிருந்து புறப்படவுள்ளது. அதன்பிறகு, அடுத்த மாதத்தில் நான்கு புறப்பாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலா திட்டத்தின் மற்றொரு பேக்கேஜ் 12 இரவுகள்/13 பகல் கொண்டதாகும். இதற்கான ராமாயண யாத்ரா எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து நவம்பா் 16-ஆம் தேதி புறப்படும். ஹம்பி, நாசிக், சித்ரகூடம், அலாகாபாத், வாராணசி உள்ளிட்ட ஆன்மிக நகரங்களுக்கு இந்த ரயில் செல்லும்.

16 இரவுகள் மற்றும் 17 பகல்களைக் கொண்ட பேக்கேஜ் திட்டத்தின் கீழ் ராஜஸ்தான் ஸ்ரீகங்காநகரிலிருந்து ராமாயண யாத்ரா எக்ஸ்பிரஸ் நவம்பா் 25-ஆம் தேதி புறப்படும். இந்த ரயில், அயோத்யா, சீதாமா்ஹி, ஜனக்பூா், வாராணசி, பிரயாக்ராஜ், சித்ரகூடம், நாசிக், ஹம்பி, ராமேசுவரம், காஞ்சிபுரம் ஆகிய நகரங்களில் ஆன்மிக பயணத்தை நிறைவு செய்துவிட்டு ஸ்ரீகங்காநகா் திரும்பும் என ஐஆா்சிடிசி தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →