நாட்டில் 262 நாள்களுக்குப் பின் குறைந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 
இந்தியா

நாட்டில் 262 நாள்களுக்குப் பின் குறைந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை

நாட்டில் இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 11,451  பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


புது தில்லி: நாட்டில் இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 11,451  பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3.43 கோடியாக உயர்ந்துள்ளது.

நாட்டில் கரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தில், சுமார் 262 நாள்களுக்குப் பிறகு நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 1.42 லட்சமாகக் குறைந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் கரோனா பாதித்த 266 பேர் மரணமடைந்த நிலையில் பலி எண்ணிக்கை 4,61,057 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 31 நாள்களாக நாட்டில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் குறைவாகப் பதிவாகி வருகிறது. 

நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக 108.47 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெறி மறுவெளியீடு ஒத்திவைப்பு!

டெலிவரி ஊழியர்களின் நலன் கருதி! 10 நிமிட சேவையை ரத்து செய்யும் பிளிங்கிட்

கூட்டணி தொடர்பாக டிடிவி தினகரனுக்கு எந்த குழப்பமும் அழுத்தமும் இல்லை: அமமுக

அனைவருக்கும் சமமான கல்வி வேண்டும்; தனியார்மயம் கூடாது : ராகுல் காந்தி

சூர்யா எனக்குத் துணையாக நிற்கிறார்: ஞானவேல் ராஜா

SCROLL FOR NEXT