முகப்பு
இந்தியா

பெட்ரோல் விலை உயர்வு: மகாராஷ்டிரத்தில் நவ. 14 முதல் காங். ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மகாராஷ்டிரத்தில் நவம்பர் 14 முதல் 19 வரை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் நானா படேல் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
நானா படோல்
பகிர்:

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மகாராஷ்டிரத்தில் நவம்பர் 14 முதல் 19 வரை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் நானா படோல் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிரத்திலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படேல் கூறியது:

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சாதாரண மக்களை பொருளாதார ரீதியாக நலிவடையச் செய்யும் மத்திய அரசின் கொள்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.

நவம்பர் 14 முதல் 19 வரை மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →