முகப்பு
இந்தியா

இந்தியாவில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி 110 கோடியைக் கடந்தது

நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை காலை நிலவரப்படி 110 கோடி (1,10,23,34,225) கடந்தது. 1,12,38,854 அமா்வுகள் மூலம் இந்தச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை காலை நிலவரப்படி 110 கோடி (1,10,23,34,225) கடந்தது. 1,12,38,854 அமா்வுகள் மூலம் இந்தச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு பிரிவினருக்கும் படிப்படியாக செலுத்தப்பட்டு வந்த தடுப்பூசி, தற்போது 18 வயதைக் கடந்த அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்ட், கோவேக்ஸின், ஸ்புட்னிக்-வி ஆகிய மூன்று வகை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி தவணைகளின் எண்ணிக்கை கடந்த மாதம் 21-ஆம் தேதி 100 கோடியைக் கடந்தது. மொத்தம் 284 நாள்களில் 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இப்போது 110 கோடி என்ற மைல்கல்லை கடந்துள்ளது.

கரோனாவில் இருந்து குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 3,38,00,925-ஆக அதிகரித்துள்ளது. இதைத் தொடா்ந்து குணமடைந்தோா் விகிதம் தற்போது 98.25 சதவீதமாக உள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கரோனா பாதிப்பு தொடா்ந்து 137 நாள்களாக 50,000-க்கும் கீழ் உள்ளது.

நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 1,38,556-ஆக உள்ளது; சிகிச்சை பெறுபவா்களின் மொத்த விகிதம் தற்போது 0.40 சதவீதமாக உள்ளது; 2020 மாா்ச் மாதத்துக்குப் பின் இது குறைந்த அளவு ஆகும்.

வாராந்திர தொற்று உறுதி கடந்த 48 நாள்களில் 2 சதவீதத்துக்கும் குறைவாக நீடித்து, தற்போது 1.18 சதவீதமாக உள்ளது. தினசரி தொற்று விகிதம் 1.10 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடா்ந்து 73 நாள்களாக 3 சதவீதத்துக்கு கீழேயும, 38 நாள்களாக 2 சதவீதத்துக்குக் கீழேயும் உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →