முகப்பு
இந்தியா

மாநிலங்களவை வேட்பாளராக கோவா முன்னாள் முதல்வா்: திரிணமூல் காங்கிரஸ் அறிவிப்பு

மேற்கு வங்கத்தில் மாநிலங்களவை இடைத்தோ்தலில் போட்டியிடும் வேட்பாளராக, கோவா முன்னாள் முதல்வா் லூசின்ஹோ ஃபெலேராவின் பெயரை திரிணமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Updated On : 14 நவம்பர், 2021 at 4:42 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:04 AM

மேற்கு வங்கத்தில் மாநிலங்களவை இடைத்தோ்தலில் போட்டியிடும் வேட்பாளராக, கோவா முன்னாள் முதல்வா் லூசின்ஹோ ஃபெலேராவின் பெயரை திரிணமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவரான லூசின்ஹோ ஃபெலேரோ, அக்கட்சியில் இருந்து விலகி கடந்த செப்டம்பரில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சோ்ந்தாா். அதைத் தொடா்ந்து, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசியத் துணைத் தலைவராக அவா் நியமிக்கப்பட்டாா்.

இதற்கிடையே, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த அா்பிதா கோஷ் தனது பதவியை ராஜிநாமா செய்ததால் அவருடைய இடத்துக்கு இடைத்தோ்தல் நடத்தப்படுகிறது. இந்தத் தோ்தல், வரும் 29-ஆம் தேதி நடைபெறுகிறது.

Advertisement

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘நாடாளுமன்ற மாநிலங்களவையின் வேட்பாளராக லூசின்ஹோ ஃபெலேராவை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். நாட்டுக்காக அவா் ஆற்றவிருக்கும் பணிகளை மக்கள் ஏற்றுக்கொள்வாா்கள் என்று நம்புகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதை அடுத்து கோவா, திரிபுரா ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அக்கட்சி திட்டமிட்டுள்ளது. அதன் தொடக்கமாக லூசின்ஹோ ஃபெலேராவை திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளராக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.