முகப்பு
இந்தியா

இது நேரு கால காங்கிரஸ் அல்ல: என்சிபி-யில் இணைந்த யோகானந்த் சாஸ்திரி

தற்போதைய காங்கிரஸ் ஜவஹர்லால் நேரு கால காங்கிரஸ் கிடையாது என தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்த யோகானந்த் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:35 AM
கோப்புப்படம்
பகிர்:


தற்போதைய காங்கிரஸ் ஜவஹர்லால் நேரு கால காங்கிரஸ் கிடையாது என தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்த யோகானந்த் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யோகானந்த் சாஸ்திரி கடந்த 2020-இல் ராஜிநாமா செய்தார். இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் முன்னிலையில் அக்கட்சியில் புதன்கிழமை இணைந்தார்.

இதுகுறித்து யோகானந்த் சாஸ்திரி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியது:

"ஒருவர் எப்போதும் வேலை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற கலாசாரத்தை நம்புபவர்கள் நாம். என்னை நானே சும்மா வைத்திருக்க முடியாது. கட்சி எனக்குப் போதிய பணிகளை ஒதுக்காததால் நான் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன்.

காங்கிரஸ் மாறிவிட்டது. நேரு காலத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி அல்ல அது. பங்களிக்க வேண்டும் என்பவர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நான் கட்சித் தலைமையைக் காரணம் கூற மாட்டேன். ஆனால், கள நிலவரம் என்ன என்பது நீங்கள் அறிந்ததுதான். உள்ளூர் அளவில் இருக்கக்கூடிய கட்சிதான் சரியாக இல்லை. மரியாதை கொடுக்கப்படுவதில்லை."

யோகானந்த் சாஸ்திரி 2008 முதல் 2013 வரை தில்லி சட்டப்பேரவைத் தலைவராக இருந்துள்ளார். தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையிலான அரசில் கேபினட் அமைச்சராக இருந்துள்ளார் யோகானந்த் சாஸ்திரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.