இந்தியா

ம.பி.,யில் கரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்: முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான்

DIN


மத்தியப் பிரதேசத்தில் கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதால், அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளார்.

இதுபற்றி முதல்வர் கூறியது:

"மத்தியப் பிரதேசத்தில் கரோனா நோய்த் தொற்று தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. 78 பேர் மட்டுமே இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பெருந்தொற்று காலத்தில் அமல்படுத்தப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு இன்று முதல் நீக்கப்படும். திரையரங்குகள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா மையங்கள், விடுதிகள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி வகுப்புகள் அனைத்தும் 100 சதவிகிதம் செயல்படும்.

எனினும், அனைத்து செயல்பாடுகளும் கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றியே  நடைபெறும். முகக் கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது கட்டாயம். அனைத்துக் கடை உரிமையாளர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட விடுதி மாணவர்கள், ஆசிரியர்கள், திரையரங்கு ஊழியர்கள் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தியிருக்க வேண்டும்" என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT