முகப்பு
இந்தியா

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து: உச்சநீதிமன்றத்தில் உயர்கல்வித்துறை மேல்முறையீடு

வன்னியர் உள்ஒதுக்கீடு அரசாணை ரத்துக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் உயர்கல்வித்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:35 AM
பகிர்:

வன்னியர் உள்ஒதுக்கீடு அரசாணை ரத்துக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் உயர்கல்வித்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் பலா் முறையீட்டு மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பு அளித்தது. அதில், சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும், அவ்வாறு முறையாக கணக்கெடுக்காமல் எப்படி இடஒதுக்கீட்டை வழங்க முடியும்? 

அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவைத் தோ்தலை கருத்தில் கொண்டே இந்தச் சட்டம் அவசரமாக இயற்றப்பட்டுள்ளது. இதை இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? இதுதொடா்பாக முறையான தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீட்டை வழங்க முடியுமா என கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை எனவும் கூறி வன்னியா் சமூகத்தினருக்கான உள்இடஒதுக்கீடு செல்லாது என தீா்ப்பளித்தனா்.

இந்த நிலையில் வன்னியர் உள்ஒதுக்கீடு அரசாணை ரத்துக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் உயர்கல்வித்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சட்ட விதிகளை மீறி 10.5% இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து இரு தினங்களுக்கு முன் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது உயர்கல்வித்துறை சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →