கோப்புப்படம் 
இந்தியா

நாடாளுமன்ற விவாதங்களில் பிரதமர் பங்கேற்பாரா? ப. சிதம்பரம்

நாடாளுமன்ற விவாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி எப்போதாவது பங்கேற்பாரா என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

DIN


நாடாளுமன்ற விவாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி எப்போதாவது பங்கேற்பாரா என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

82-வது அகில இந்திய பேரவைத் தலைவர்கள் மாநாட்டின் தொடக்க விழாவில் புதன்கிழமை காணொலி மூலம் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆக்கபூர்வமான, ஆரோக்கியமான விவாதங்களுக்கென சட்டப்பேரவைகளில் தனி நேரம் ஒதுக்கப்பட வேண்டியது அவசியம் என்றார்.

இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:

"நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான, ஆரோக்கியமான விவாதங்களின் அவசியம் குறித்து பிரதமர் வலியுறுத்தியிருப்பதைப் பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ளது. இதற்கெனப் பிரத்யேகமாக நேரம் ஒதுக்குவது குறித்தும் அவர் பரிந்துரை வைத்துள்ளார்.

ஆனால், பிரதமர் எப்போதாவது நாடாளுமன்ற விவாதங்களில் பங்கெடுப்பாரா என்பதுதான் கேள்வியாக உள்ளது."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT