இந்தியா

திருப்பதியில் கனமழை: தரிசனத்துக்காக பக்தர்கள் வர வேண்டாம் - தேவஸ்தானம்

DIN

திருப்பதியில் கனமழை காரணமாக, பெருவெள்ளம் ஏற்பட்டு, கோயில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து கொண்ட நிலையில், கனமழை நிற்கும் வரை கோயிலில் சுவாமி தரிசனத்துக்காக பக்தர்கள் வர வேண்டாம் என்று கோயில் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த இரண்டு நாள்களாக சித்தூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், சேஷாசல வனப்பகுதியில் உள்ள கபில தீர்த்தம் அருவில் வெள்ளம் ஆர்ப்பரித்துள்ளது.

இதனால், திருப்பதி மலை பாதை மற்றும்ட நடைபாதையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்துக் கொட்டியது. மலைகளிலும் நீர்வீழ்ச்சிகளும் அருவிகளும் கொட்டின. இந்த விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டன.

வெள்ளம் காரணமாக திருப்பதி திருமலைக்கு வந்த பக்தர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். புயல், மழை காரணமாக திருமலைக்குச் செல்லும் இரு நடைபாதை மாா்க்கங்களும் நவ.17, 18-ஆம் தேதிகளில் மூடப்பட்டிருந்தது. தரிசன டிக்கெட் இருந்தாலும் பக்தா்கள் இந்த இரு நாள்களும் நடைபாதை மாா்க்கத்தில் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

பாதைகளில் பறைகள் விழுந்த சேதமடைந்த நிலையில், இரவோடு இரவாக அவற்றை சரி செய்து, காலை முதல் திருமலையிலிருந்து திருப்பதிக்கு வாகனங்கள் மிகப் பாதுகாப்பாக இயக்கப்பட்டு பக்தர்கள் திருமலையிலிருந்து திரும்ப வசதி செய்யப்பட்டது.

திருப்பதியில் மழை கொட்டி வருவதால், பக்தர்கள் யாரும் தரிசனத்துக்கு வர வேண்டாம் என்றும், ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டுகள் பதிவு செய்த பக்தர்கள் மழை நின்ற பிறகு எப்போது வந்தாலும், தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட்'

உழைப்பாளர் தினம்

திரைக் கதிர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT