முகப்பு
இந்தியா

இந்திரா காந்தி பிறந்தநாள்: சோனியா காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அரசியல் தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
நாடாளுமன்றத்தில் இந்திரா காந்தியின் திருவுருவப் படத்திற்கு சோனியா காந்தி உள்ளிட்டோர் மரியாதை.
பகிர்:

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். 

  இந்திரா காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை 

'இந்தியாவின் இரும்புப் பெண்மணி' முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் இன்று(நவ.19) கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். 

    இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய காங்கிரஸ் தலைவர்கள். 

தில்லியில் சக்தி ஸ்தலாவில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இந்திரா காந்திக்கு மரியாதை செய்தனர். 

Advertisement

    இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய மக்கள். 

இதையடுத்து நாடாளுமன்றத்திலும் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் உள்ள இந்திரா காந்தியின் திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இந்திரா காந்தியின் திருவுருவப் படத்திற்கு சோனியா காந்தி மரியாதை. 

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் இந்திரா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments