முகப்பு
இந்தியா

ஆணவம் தலைகுனிந்தது; அநீதிக்கு எதிரான வெற்றிக்கு வாழ்த்துக்கள்: ராகுல்

மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
ராகுல் காந்தி (கோப்புப் படம்)
பகிர்:

மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நாட்டு மக்களிடையே இன்று பேசிய பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். மேலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முறையாக திரும்பப் பெறப்படும் எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

நாட்டிற்கு உணவளிக்கும் விவசாயிகளின் சத்யாகிரகத்திற்கு ஆணவம் தலைகுனிந்தது. அநீதிக்கு எதிரான வெற்றிக்கு வாழ்த்துக்கள் எனத் தெரிவித்திருந்தார்.

கடந்தாண்டு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக 11 மாதங்களாக தில்லி எல்லையில் ஹரியாணா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மாநிலங்களின் விவசாயிகள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments