அரவிந்த் கேஜரிவால் 
இந்தியா

‘இன்றைய நாள் வரலாற்றில் பொன் எழுத்துகளால் எழுதப்படும்’: கேஜரிவால்

இந்திய வரலாற்றில் இன்றைய தினம் பொன் எழுத்துகளால் எழுதப்படும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

DIN

இந்திய வரலாற்றில் இன்றைய தினம் பொன் எழுத்துகளால் எழுதப்படும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களிடையே இன்று பேசிய பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். மேலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முறையாக திரும்பப் பெறப்படும் எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து அரவிந்த் கேஜரிவால் கூறுகையில்,

“இறுதியில் மக்கள் சொல்வதை மத்திய அரசு கேட்கும் என்பதை விவசாயிகள் நிரூபித்துள்ளனர். விவசாயிகளின் உறுதிக்கு எதிராக தண்ணீர் பீரங்கிகளும், லத்திகளும் காய்ந்து, நகங்கள் உருகின.

சுதந்திர தினம், குடியரசு தினம் போன்று இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் இன்றைய தினம் எழுதப்படும். இது விவசாயிகளின் வெற்றி மட்டுமல்ல ஜனநாயகத்தின் வெற்றி. விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை சீர்குலைக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. போராட்டக்காரர்களை காலிஸ்தானிகள், பயங்கரவாதிகள் என்று கூறியது. ஆனால் விவசாயிகள் போராட்டத்தை கைவிடவில்லை.”

கடந்தாண்டு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக 11 மாதங்களுக்கு மேலாக தில்லி எல்லையில் ஹரியாணா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாய்ப்புகள் காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT