முகப்பு
இந்தியா

அசாம், ராஜஸ்தான் மாநிலங்களில் மிதமான நிலநடுக்கம்

அசாம், ராஜஸ்தான் மாநிலங்களில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:30 AM
பகிர்:

அசாம், ராஜஸ்தான் மாநிலங்களில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

அசாம் மாநிலம், ஹவுகாத்தில் இன்று பிற்பகல் 1 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1ஆகப் பதிவானத தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹவுகாத்தில் இருந்து 38 கி.மீ. தொலைவிலும், பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. எனினும் நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இதேபோல் ராஜஸ்தான் மாநிலம், ஜாலோர் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →