கோப்புப்படம் 
இந்தியா

பஞ்சாப்: பதான்கோட் ராணுவ முகாம் அருகே குண்டுவெடிப்பு

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் எல்லைப் பகுதியில் ராணுவ முகாம் அருகே இன்று காலை கையெறி குண்டு வெடித்ததால் பதற்றம் நிலவி வருகிறது.

DIN

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் எல்லைப் பகுதியில் ராணுவ முகாம் அருகே இன்று காலை கையெறி குண்டு வெடித்ததால் பதற்றம் நிலவி வருகிறது.

இன்று காலை பதான்கோட்டில் ராணுவ  முகாமின் நுழைவுப் பகுதியில் கையெறி குண்டு வீசப்பட்டதாகவும் இருப்பினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவலில் தெரிய வந்திருக்கிறது.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் சுரேந்திர லம்பா தெரிவித்திருக்கிறார்.

பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகம் கொண்ட எல்லை மாவட்டமான பதான்கோட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய விமானப்படை தளத்தில் நடத்த தாக்குதலுக்கு பின் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் இந்த வெடிகுண்டு தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் 5 புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்!

கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல: டிரம்ப்புக்கு எதிராக மாபெரும் பேரணி!

வாழைப்பழம் தொடர்பான தகராறு: வங்கதேசத்தில் ஹிந்து தொழிலதிபர் அடித்துக் கொலை

24 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது!

ஜன. 20-ல் தவெக தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை

SCROLL FOR NEXT