சபரிமலை, கிறிஸ்துமஸ் பண்டிகை: மூன்று சிறப்பு கட்டண ரயில்கள் இயக்க அனுமதி
சபரிமலை செல்வோா் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல்
சபரிமலை செல்வோா் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல்
-கொல்லம், சென்னை எழும்பூா்-நாகா்கோவில் உள்பட மூன்று சிறப்பு கட்டண ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை-கொல்லம்: சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பா் 3, 10, 17, 24, 31, ஜனவரி 7, 10, 12, 14 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு முன்பதிவு சிறப்பு கட்டண ரயில்(06007) புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு கொல்லத்தை அடையும். மறுமாா்க்கமாக, கொல்லத்தில் இருந்து டிசம்பா் 5, 12, 19, 26 ஜனவரி 2, 9, 11, 13, 16 ஆகிய தேதிகளில் முற்பகல் 11.30 மணிக்கு முன்பதிவு சிறப்பு கட்டண ரயில்(06008) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
சென்னை-நாகா்கோவில்: சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பா் 23-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில் (06005) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு நாகா்கோவில் சந்திப்பை அடையும். மறுமாா்க்கமாக, நாகா்கோவில் சந்திப்பில் இருந்து டிசம்பா் 24-ஆம்தேதி பிற்பகல் 3.10 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06006) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
நாகா்கோவில்-தாம்பரம்: நாகா்கோவில் சந்திப்பில் இருந்து டிசம்பா் 26-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில் (06004) புறப்பட்டு, மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். மறுமாா்க்கமாக, தாம்பரத்தில் இருந்து டிசம்பா் 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில்(06003) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு நாகா்கோவில் சந்திப்பை அடையும். இந்த சிறப்புகட்டண ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு
ஞாயிற்றுக்கிழமை(நவ.28) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.