முகப்பு
இந்தியா

செப்., அக். மாதங்களோடு ஒப்பிடுகையில் தில்லியில் நவம்பர் மாத கரோனா பலி அதிகரிப்பு

புது தில்லியில், இன்றுடன் நிறைவடையும் நவம்பர் மாதத்தில் மட்டும் 7 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
செப்., அக். மாதங்களோடு ஒப்பிடுகையில் தில்லியில் நவம்பர் மாத கரோனா பலி அதிகரிப்பு
பகிர்:

புது தில்லி: புது தில்லியில், இன்றுடன் நிறைவடையும் நவம்பர் மாதத்தில் மட்டும் 7 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இது கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களை ஒப்பிடுகையில் அதிகமாகும்.

புது தில்லியில் கடந்த அக்டோபரில் 4 பேரும், செப்டம்பரில் 5 பேரும் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

நவம்பர் 29ஆம் தேதி புது தில்லியில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். 34 பேருக்கு புதிதாக கரோனா உறுதியாகியுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதுபோல, நவம்பர் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் தொடர்ந்து ஒரு கரோனா பலி பதிவாகியுள்ளது.

இதுவரை புது தில்லியில் 14.15 லட்சம் பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25,098 ஆக உள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →