முகப்பு
இந்தியா

கேரளத்தில் ஒரேநாளில் 13,834 பேருக்கு கரோனா 

கேரளத்தில் ஒரேநாளில் 13,834 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

கேரளத்தில் ஒரேநாளில் 13,834 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,05,368 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 13,834 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
அதிகபட்சமாக திரிச்சூரில் 1,823 பேரும், எர்ணாகுளத்தில் 1,812 பேரும், திருவனந்தபுரத்தில் 1,464 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,94,719 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 95 பேர் பலியானார்கள். 

இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 25,182 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,42,499 சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 13,767 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 45,26,429 ஆக உயர்ந்துள்ளது. 
பல்வேறு மாவட்டங்களில் 4,40,194 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.