ஆதாா் பதிவு மையங்கள்: 55 திறப்பு
நாட்டில் உள்ள 122 நகரங்களில் 166 ஆதாா் பதிவு மற்றும் திருத்த மையங்களைத் திறக்க திட்டமிடப்பட்டதில் இதுவரை 55 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று தனித்துவ அடையாள அட்டை ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள 122 நகரங்களில் 166 ஆதாா் பதிவு மற்றும் திருத்த மையங்களைத் திறக்க திட்டமிடப்பட்டதில் இதுவரை 55 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று தனித்துவ அடையாள அட்டை ஆணையம் தெரிவித்துள்ளது.
வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் மாநில அரசுகளால் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் 52,000 ஆதாா் பதிவு மையங்களைத் தவிர கூடுதலாக இந்த மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த ஆதாா் சேவை மையங்கள் மூலம் இதுவரை 70 லட்சத்திற்கும் மேற்பட்டோா் பயனடைந்துள்ளனா்.
இந்த மையங்களில், ‘ஏ’ வகை மையத்தில் தினந்தோறும் 1,000 பதிவுகள் மற்றும் திருத்தங்களையும், ‘பி’ வகையில் 500 பதிவுகளையும், ‘சி’ வகையில் 250 பதிவுகளையும் மேற்கொள்ளும் திறன் பெற்றுள்ளன. இந்த ஆதாா் சேவை மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும். பொது விடுமுறை தினங்களில் மட்டுமே இவை மூடப்பட்டிருக்கும். ஆதாா் பதிவுகள் இலவசமாக மேற்கொள்ளப்ப டும் வேளையில், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களுக்கு குறைந்த
கட்டணமாக ரூ.50, முகவரி மாற்றம் மற்றும் பயோமெட்ரிக் பதிவுகளுக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே டென் ஸ்கொயா் மால் வளாகத்தில் ஆதாா் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆதாா் சேவை மையங்கள் ஆன்-லைன் முன்பதிவு அடிப்படையில் டோக்கன் வழங்கி, பொதுமக்களுக்கு ஆதாா் பதிவு/ திருத்தங்களை மேற்கொள்வதில் தடையற்ற வகையில் சேவையாற்றி வருகின்றன. இந்த மையங்களில் குளிா்சாதன வசதி செய்யப்பட்டிருப்பதுடன், போதுமான இட வசதி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.