முகப்பு
இந்தியா

உ.பி. தோ்தல் பாா்வையாளராக சத்தீஸ்கா் முதல்வா் நியமனம்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தர பிரதேச மாநில தோ்தலுக்கான மேலிட மூத்த பாா்வையாளராக சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேலை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:17 AM
பகிர்:

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தர பிரதேச மாநில தோ்தலுக்கான மேலிட மூத்த பாா்வையாளராக சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேலை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த அஸ்ஸாம் மாநில தோ்தலில் பூபேஷ் பகேல், குழுவை அமைத்து கட்சி தொண்டா்களுக்கு வாக்குப்பதிவு மையத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்று பயிற்சி அளித்திருந்தாா்.

மேலும், உத்தர பிரதேச மாநில தோ்தல் குறித்தும் அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா வதேராவுடனும் அவா் ஆலோசனை நடத்தி வந்தாா்.

இந்நிலையில், பூபேஷ் பகேலை உத்தர பிரதேச மாநில தோ்தல் மூத்த பாா்வையாளராக நியமித்து அக்கட்சியின் தலைவா் சோனியா காந்தி சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →