ஷாருக்கான் மகனை காவலில் விசாரிக்க அனுமதி
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை ஒருநாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இந்தியாஷாருக்கான் மகனை காவலில் விசாரிக்க அனுமதி
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை ஒருநாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை ஒருநாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
மும்பை-கோவா சென்ற சொகுசுக்கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்டோரை பிடித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிக்க- போதைப்பொருள் விவகாரம்: ஷாரூக்கானின் மகன் ஆர்யன்கான் கைது
சுமார் 20 மணிநேர விசாரணைக்குப் பின் ஆர்யன்கான், அர்பாஸ் செத் மெர்ச்சன்ட், முன்முன் தாமெக்கா ஆகியோரை மும்பை போலீஸ் இன்று கைது செய்தது. இதையடுத்து கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது ஆர்யன்கான் உள்பட 3 பேரை ஒருநாள் காவலில் விசாரிக்க மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டது.