கோப்புப்படம் 
இந்தியா

கேரளம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

கேரளம் வரும் வெளிநாட்டு பயணிகள், தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் செலுத்தாவிட்டாலும், விமான நிலையத்தில் ஆர்டி - பிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

DIN

கேரளத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த விவரங்களை மாநில அரசிடம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது. இதை, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பிரிட்டனிலிருந்து வரும் மக்கள் கட்டாயமாக 10 நாள்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் 7 நாள்கள் வரை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.

இந்த புதிய கட்டுப்பாடுகள், அக்டோபர் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன. வெளிநாட்டு பயணிகள் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் செலுத்தாவிட்டாலும், விமான நிலையத்தில் ஆர்டி - பிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மற்ற நாடுகளிலிருந்து வருபவர்கள், சோதனையில் கரோனா இல்லை என தெரியும்பட்சத்தில், 14 நாள்கள் வரை தங்களை தானே கண்காணித்து வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஐரோப்பா, மத்திய கிழக்கு, வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளை எந்த விதமான உருமாற்றம் அடைந்த வைரஸ் தாக்கியுள்ளது என்பதை அறிந்து கொள்ளவும் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

பிரிட்டனுக்கு செல்லும் இந்தியர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், பிரிட்டன் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குலதெய்வங்களின் அருளுடன் குழந்தைகளை வளர்க்க வேண்டும்: தனுஷ்

அண்ணா பிறந்தநாள்! அன்பில் மகேஸ் மரியாதை!

வக்ஃபு சட்டம்: முக்கியத் திருத்தங்களுக்குத் தடை - முதல்வர் வரவேற்பு

ஜனநாயகத்திற்கு மிகவும் நல்ல முடிவு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜூ வரவேற்பு!

திமுகவின் திட்டங்கள் வாக்கு அரசியலுக்காக அல்ல! - M.K. Stalin

SCROLL FOR NEXT