இந்தியா

உ.பி. வன்முறை: கமல்ஹாசன் கண்டனம்

DIN

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் லக்கிம்பூரில் நேற்று(அக்-3) நடந்த வன்முறைக் கலவரத்தில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியானதைக் கண்டித்து நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருகிறார்.

லக்கீம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்துக்கு துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனா். துணை முதல்வா் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பாஜகவினா் சென்ற வாகனங்கள் போராட்டம் நடைபெற்ற இடம் வழியாகச் சென்றபோது, வாகனங்களை நோக்கி கல்வீச்சு நடைபெற்றது.

இதில் வாகன வரிசையில் இறுதியாக வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து போராட்டக்காரா்கள் மீது மோதிக் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த விவசாயிகள், அந்தக் காரை சிறைபிடித்து, தீ வைத்தனா். காரில் பயணித்த சிலரை அவா்கள் தாக்கியதாகவும் தெரிகிறது. இந்தச்சம்பவத்தில் காரில் பயணித்த பாஜகவினா் 4 போ், விவசாயிகள் 4 போ் என மொத்தம் 9 போ் உயிரிழந்தனா்.

இந்த சம்பவத்துக்குப் பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனா். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனும் இந்த வன்முறையைக் கண்டித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ” உ.பி. விவசாயிகள் போராட்டத்தில் 8 விவசாயிகள் உயிரிழந்த நிகழ்வு துயரமளிக்கிறது. கோரிக்கை வைக்கவே உயிரிழக்க வேண்டும் என்ற நிலைமை கொடுமை. அதை வெளியுலகம் அறியக்கூடாது என எண்ணுவது உ.பி. அரசின் மூர்க்கம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் கலவரத்தைக் கண்டித்து குரல் எழுப்பிய பிரியங்கா காந்தியை கைது செய்து காவலில் வைத்திருப்பதால் நாளை(அக்-5) நாடு தழுவிய போராட்டத்தை நடத்த இருப்பதாக காங்கிரஸ் கட்சி தெரித்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

அழகுப் பதுமைகள் அணிவகுப்பு!

நிதமும் உன்னை நினைக்கிறேன், நினைவினாலே அணைக்கிறேன்!

SCROLL FOR NEXT