இந்தியா

பிரியங்கா காந்தி மீது காவல்துறை வழக்குப்பதிவு

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

DIN

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

உத்தரப் பிரதேசத்தின் சித்தாபூர் மாவட்டத்தில் உள்ள ஹர்கான் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அரசின் எந்த உத்தரவும் எஃப்ஐஆரும் இன்றி கடந்த 28 மணி நேரம் தன்னை போலீஸ் காவலில் வைத்துள்ளதாக பிரியங்கா காந்தி கூறியதை அடுத்து, பிரியங்கா காந்தி மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

முன்னதாக, உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் 4 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது. 

நேற்று விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூர் சென்ற பிரியங்கா காந்தி காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். தற்போது அவர் போலீஸ் காவலில் உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆவணி மாதப் பலன்கள் - மேஷம்

தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் ஸ்டாலினின் 7 கேள்விகள்!

ஆவணி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

திரைப்பட பாணியில் 40 சவரன் நகை, ரூ. 7 லட்சம் பணம் கொள்ளை!

ரஜினிகாந்துடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT