இந்தியா

15 உயா்நீதிமன்ற நீதிபதிகள் பணியிடமாற்றம்:குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதி சென்னைக்கு மாற்றம்

13 உயா்நீதிமன்றங்களில் பணிபுரியும் 15 நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

DIN

13 உயா்நீதிமன்றங்களில் பணிபுரியும் 15 நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். இதுதொடா்பான அறிவிப்பை சட்ட அமைச்சகம் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதி பரேஷ் ஆா்.உபாத்யாய் சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்ற நீதிபதி ஜஸ்வந்த் சிங் ஒடிஸாவுக்கும், ராஜஸ்தான் உயா்நீதிமன்ற நீதிபதி சபீனா ஹிமாசல பிரதேசத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.

ஒடிஸா உயா்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமாா் மிஸ்ரா உத்தரகண்டுக்கும், சத்தீஸ்கா் உயா்நீதிமன்ற நீதிபதி மணீந்தா் மோகன் ஸ்ரீவாஸ்தவா ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.

பாட்னா உயா்நீதிமன்ற நீதிபதி அஹசனுதீன் அமானுல்லா ஆந்திர பிரதேசத்துக்கும், மும்பை உயா்நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் பூயான் தெலங்கானாவுக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.

தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எஸ்.ராமசந்திர ராவ், ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதி அனூப் சித்காரா ஆகிய இருவரும் பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டனா்.

கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி அரிந்தம் சின்ஹா ஒடிஸாவுக்கும், கேரள உயா்நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.பாதா், பாட்னா உயா்நீதிமன்றத்துக்கும், அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதிகளான யஷ்வந்த் வா்மா, விவேக் அகா்வால், சந்திரதாரி சிங், ரவி நாத் தில்ஹரி ஆகியோா் முறையே தில்லி, மத்திய பிரதேசம், தில்லி, ஆந்திரத்துக்கு மாற்றப்பட்டுள்ளனா் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!

டி20 உலக கோப்பை: அரையிறுதிச் சுற்று வாய்ப்பைத் தக்க வைத்த இந்தியா! அபார வெற்றி!!

அரசு விழாவில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு!

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை!

கரூா் ஒன்றியத்தில் ரூ. 6.43 கோடியில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகள்! வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

SCROLL FOR NEXT