முகப்பு
இந்தியா

கர்நாடக இடைத்தேர்தல்: சோனியா காந்தியுடன் சித்தராமையா சந்திப்பு

கர்நாடகத்தில் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து மூத்த தலைவர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:18 AM
கோப்புப்படம்
பகிர்:


கர்நாடகத்தில் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து மூத்த தலைவர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.

தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த சித்தராமையா இதுபற்றி கூறியது: 

"சோனியா காந்தியுடனான சந்திப்புக்கு எனக்கு அழைப்பு வந்தது. நான் அவரைச் சந்தித்தேன். இடைத்தேர்தல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தேசிய அளவில் முக்கியப் பங்கு வகிப்பதற்கு கட்சி என்னைப் பரிந்துரைக்கிறது என்பது தவறு. கர்நாடக அரசியலைத் தவிர்த்து வேறு எந்தவொரு தேசிய அரசியல் குறித்தும் ஆலோசிக்கவில்லை.

காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டேன். அதையும் ராஜிநாமா செய்துவிட்டேன். எனவே, தேசிய அரசியலில் எனக்கு விருப்பம் கிடையாது.

கர்நாடக காங்கிரஸில் மாற்றம் செய்வது குறித்து சோனியா காந்தியிடம் ஆலோசனை நடத்தவில்லை. ரண்தீப் சுர்ஜேவாலாவிடம் (காங்கிரஸ் பொதுச்செயலாளர்) பட்டியலைக் கொடுத்துள்ளேன். இதுபற்றி என்னுடன் ஆலோசனை நடத்துவதாக அவர் கூறினார்" என்றார் சித்தராமையா.

கர்நாடகத்தில் சிந்தகி, ஹனகல் ஆகிய இரண்டு பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →