முகப்பு
இந்தியா

தில்லியில் புதிதாக 26 பேருக்கு கரோனா

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:19 AM
கோப்புப்படம்
பகிர்:


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 66,682 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. புதிதாக 26 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.04 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது. மேலும் 21 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

இதுவரை மொத்தம் 14,39,053 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 14,13,611 பேர் குணமடைந்துவிட்டனர். பலி எண்ணிக்கை 25,088 ஆக உள்ளது.

354 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி:

கடந்த 24 மணி நேரத்தில் 1,53,466 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,85,48,236 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.