பைஜூஸ் இணை நிறுவனர் திவ்யா கோகுல்நாத் 
இந்தியா

ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஆறு இந்திய பெண்கள் யார்?

பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு பெருந்தொற்றின் இரண்டாவது ஆண்டில் 50 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

DIN

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள முதல் 100 இந்திய பணக்காரர்களின் பட்டியலில் ஆறு பெண் தொழிலதிபர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒபி ஜிண்டால் குழுமத்தை சேர்ந்த சாவித்திரி ஜிண்டால் 13.46 லட்சம் கோடி சொத்து மதிப்பை பெற்ற பெண்களில் முதல் இடம் பிடித்துள்ளார். கடந்தாண்டை விட, இந்தாண்டு அவரின் சொத்து மதிப்பு 9.72 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. மொத்த பட்டியலில், அவர் 71ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

ஹேவல்ஸ் இந்தியாவைச் சேர்ந்த 76 வயதான வினோத் ராய் குப்தா, இந்தப் பட்டியலில் இரண்டாவது பணக்கார பெண் தொழில்முனைவோராக உள்ளார். அவர் 24ஆவது இடத்தை பிடித்துள்ளார். இந்த ஆண்டு அவரின் சொத்து மதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்து 7.6 பில்லியன் டாலராக (கிட்டத்தட்ட ரூபாய் 5.68 லட்சம் கோடி) உள்ளது. 

அடுத்த இடம், மும்பையைச் சேர்ந்த மருந்து மற்றும் உயிரித் தொழில்நுட்ப நிறுவனமான யுஎஸ்வி பிரைவேட் லிமிடெட்டின் லீனா திவாரிக்கு கிடைத்துள்ளது. ஒட்டுமொத்த பட்டியலில் அவர் 43ஆவது இடத்தை பிடித்துள்ளார். அவரின் நிகர சொத்து மதிப்பு 4.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது (கிட்டத்தட்ட ரூ. 3.28 லட்சம் கோடி).

பைஜூஸ் இணை நிறுவனர் திவ்யா கோகுல்நாத், ஒட்டுமொத்த பட்டியலில் 47ஆவது இடத்தை பிடித்துள்ளார். கரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் ஏராளமான கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வழியாக பாடங்களை கற்பித்துவருகின்றன. இதன் காரணமாக, பைஜூஸ் போன்ற டிஜிட்டல் தளங்கள் வேகமாக வளர்ந்தன. கோகுல்நாத்தின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 1 பில்லியன் டாலர் (கிட்டத்தட்ட ரூபாய் 7,477 கோடி) வளர்ந்து 4.05 பில்லியன் டாலராக (கிட்டத்தட்ட ரூபாய் 3.02 லட்சம் கோடி) உள்ளது.

பயோகானின் கிரண் மசும்தார் ஷா, பெண்களில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் ஒட்டுமொத்தமாக 53 வது இடத்தில் இடம்பெற்றிருந்தாலும் கடந்த ஆண்டில் அவரது சொத்து மதிப்பு குறைந்தது. அவர் 2020இல் 4.6 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (கிட்டத்தட்ட 4 3.43 லட்சம் கோடி) சொத்து மதிப்பை கொண்டிருந்தார். ஆனால், இந்த ஆண்டு அவருடைய நிகர சொத்து மதிப்பு 3.9 பில்லியன் அமெரிக்க டாலராக (கிட்டத்தட்ட ரூபாய் 2.91 லட்சம் கோடி) குறைந்துள்ளது.

டிராக்டர்கள் அண்ட் ஃபார்ம் எக்விப்மென்ட் லிமிடெட் (TAFE) நிறுவனத்தின் உரிமையாளரான மல்லிகா சீனிவாசன், பணக்கார பெண்களில் அடுத்த இடத்தை பிடித்துள்ளார். அவருடைய நிகர சொத்து மதிப்பு 2.89 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது (கிட்டத்தட்ட 16 2.16 லட்சம் கோடி). மொத்த பட்டியலில் 73ஆவது இடத்தை பிடத்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன்: இணையமைச்சா் எல்.முருகன்

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

எந்த நடிகர் மாநாடு நடத்தினாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை: செல்லூர் ராஜு

கோத்ரெஜ் பிராபர்டீஸ் நிகர கடன் 42 சதவிகிதம் உயர்வு!

ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா்: ஜி.கே வாசன்

SCROLL FOR NEXT