பிரியங்கா காந்தி 
இந்தியா

‘நீதிக்கான எனது போராட்டத்தை தொடர்வேன்’: பிரியங்கா காந்தி

நீதிக்கான எனது போராட்டத்தை தொடர்வேன் என லக்கிம்பூரில் விவசாயிகளை சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

DIN

நீதிக்கான எனது போராட்டத்தை தொடர்வேன் என லக்கிம்பூரில் விவசாயிகளை சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி திங்கள்கிழமை காலை முதல் சீதாபூரிலுள்ள காவல் துறை விருந்தினர் இல்லத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். புதன்கிழமை மாலை தடுப்புக் காவலில் இருந்து பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அங்கிருந்து லக்கிம்பூருக்கு ஒன்றாக காரில் புறப்பட்டுச் சென்று விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை காலை பிரியங்கா பேசியது,

“ஜனநாயகத்தில் நீதி என்பது ஒரு உரிமை. நீதிக்கான எனது போராட்டத்தை நான் தொடர்வேன். நாங்கள் நேற்று(அக்.6) சந்தித்த பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்தினரும் நீதி மட்டுமே கோருகின்றனர். நடுநிலையான விசாரணையை உறுதி செய்ய மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT