கபில் சிபல் (கோப்புப்படம்) 
இந்தியா

லக்கிம்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? - கபில் சிபல் கேள்வி

லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் இன்னும் அமைதியாக இருக்கிறார்? என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். 

DIN

லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் இன்னும் அமைதியாக இருக்கிறார்? என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். 

உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் பகுதியில் கடந்த அக். 3 ஆம் தேதி நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுடைய கார் விவசாயிகளின் மீது மோதியதால் அவர்மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். 

இந்த வழக்கில் 4 நாள்களாக யாரும் கைது செய்யப்படாத நிலையில் நேற்று உ.பி. காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்துள்ளது. மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீதும் வழக்குப்பதிவு செய்து அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

வழக்குப்பதிவு, கைது விவரங்கள் குறித்து விரிவான அறிக்கையை இன்று தாக்கல் செய்யும்படி உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த வன்முறை சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், 'லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் இன்னும் அமைதியாக இருக்கிறார்?' என கேள்வி கேள்வி எழுப்பியுள்ளளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'மோடிஜி, நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? 

உங்களிடமிருந்து ஒரு அனுதாப வார்த்தை மட்டும் தேவை. அதுவொன்றும் அவ்வளவு கடினமில்லையே?

நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் இந்த சம்பவத்துக்கு என்ன எதிர்வினையாற்றி இருப்பீர்கள்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

உ.பி. அரசு அனுமதி மறுத்ததை அடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ரா ஆகியோர் லக்கிம்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

மனிதர்களை 2-வது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி. அரசு உத்தரவு

கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு அச்சுறுத்தல்!

ஜெய்லர்- 2 படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் முடியும்: நடிகர் ரஜினி தகவல்

SCROLL FOR NEXT