‘உடல்நலக் குறைவால் எனது மகன் ஆஜராகவில்லை’: மத்திய அமைச்சர்
உடல்நலக் குறைவால் எனது மகனால் இன்று விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளர்.
உடல்நலக் குறைவால் எனது மகனால் இன்று விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளர்.
லக்னெள விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் பேசுகையில்,
உடல்நலக் குறைவால் எனது மகனால் இன்று விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. நாளை காலை அவர் விசாரணைக்கு ஆஜராவார் எனத் தெரிவித்தார்.
Advertisement
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் மீது காரை ஏற்றியதில் 8 பேர் பலியாகினர். இந்த பிரச்னை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் மீது ஏற்றிய காரில் மத்திய இணையமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அவரின் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆஷிஷ் மிஸ்ராவை இன்று காலை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியும் வரவில்லை. இதையடுத்து நாளை காலை 11 மணிக்கு ஆஜராகக்கோரி இரண்டாவது முறையாக மத்திய அமைச்சரின் வீட்டின் வெளியே நோட்டீஸை உ.பி. காவல்துறையினர் ஒட்டியுள்ளனர்.