முகப்பு
இந்தியா

நாட்டில் 7 மாதங்களுக்குப் பின் குறைந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை

நாட்டில் இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 19,740 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுளள்து. இதன் மூலம், கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2,36,643 ஆக உள்ளது.

Updated On : 9 அக்டோபர், 2021 at 11:08 AM
நாட்டில் 7 மாதங்களுக்குப் பின் குறைந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:50 AM


புது தில்லி: நாட்டில் இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 19,740 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுளள்து. இதன் மூலம், கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2,36,643 ஆக உள்ளது.

நாட்டில் சுமார் 6 மாதங்களுக்குப் பின் அதாவது 206 நாள்களுக்குப் பின், கரோனா நோயாளிகள் எண்ணிக்கை இந்த அளவுக்குக் குறைந்திருப்பது இதுவே முதல் முறை.

கரோனா நிலவரம் குறித்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.

Advertisement

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 23,070 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து, இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,32,48,291 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 97.98 சதவீதமாக உள்ளது.

நேற்று ஒரே நாளில் 12,69,291 கரோனா பரிசோதனை செய்யப்பட்டுளள்து. வாராந்தோறும் கரோனா உறுதியாகும் விகிதம் 1.62 சதவீதமாக உள்ளது. சுமார் 106 நாள்களாக கரோனா உறுதியாகும் விகிதம் 3 சதவீதத்துக்குள் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.