இந்தியா

சதம் அடித்த டீசல் விலை; உச்சத்தை தொட்ட பெட்ரோல்...முழு விவரம் இதோ!

DIN

தொடர்ந்து ஐந்தாவது நாளாக விலை ஏற்றப்பட்ட நிலையில், வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்ந்துள்ளது. தேசிய தலைநகர் தில்லியில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசு உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, 103.84க்கு விற்கப்படுகிறது. 

டீசல் விலை 35 காசுகள் உயர்த்தப்பட்டு, 90.47 ரூபாய்க்கு விற்கப்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் கிட்டத்தட்ட 110 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 29 பைசா உயர்த்தப்பட்ட பிறகு, 109.83 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு லிட்டர் டீசல் 100.29 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, மெட்ரோ நகரங்களிலேயே, எரிபொருள் விலை மும்பையில்தான் அதிகமுள்ளது. மதிப்பு கூட்டப்பட்ட வரி காரணமாக மாநிலங்கள் முழுவதும் எரிபொருள் விகிதங்கள் மாறுபடும்.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற அரசு சார்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பு விகிதங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு தினசரி எரிபொருள் கட்டணத்தை திருத்துகின்றன. திருத்தப்படும் விலை, காலை 6 மணி முதல் அமலுக்குவரும். 

அக்டோபர் 8 வெள்ளிக்கிழமையன்று, உலகளாவிய எண்ணெய் அளவுகோலான ப்ரெண்ட் கச்சா பியூச்சர்ஸில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 0.76 சதவிகிதம் உயர்ந்து 82.57 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

முக்கிய நகரங்களில் பெட்ரோல் டீசல் விலை விவரம்

நகரம்பெட்ரோல்டீசல்
தில்லி103.84
92.47
மும்பை109.83
100.29
சென்னை
101.27
96.93
கொல்கத்தா104.52
95.58

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT