இந்தியா

காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்: கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு வலியுறுத்தல்

DIN

தில்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் கர்நாடக அரசு வழங்க வேண்டிய 28.6 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிட தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. 

காவிரி நீரை முறைப்படுத்தி வழங்கும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 53வது கூட்டம் தில்லியில் இன்று பிற்பகல் நடைபெற்றது. 

இதில் தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் சார்பில் அதிகாரிகள் பங்கேற்றனர். 

தமிழக அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 

அப்போது இந்த மாதத்திற்கான கர்நாடக அரசு வழங்க வேண்டிய 28.6 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிட தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT