இந்தியா

கேரளம்: சிகிச்சைப் பெற்று வருவோர் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது

DIN


கேரளத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருவோர் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 1 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது.

கேரளத்தில் புதிதாக 7,823 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 106 பேர் பலியாகியுள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 86,031 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 35 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 382 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 48,09,619 ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 26,448 ஆகவும் உயர்ந்துள்ளன.

மேலும் 12,490 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 46,85,932 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன்மூலம், 5 மாதங்களுக்குப் பிறகு நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருவோர் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் கீழ் குறைந்து 96,646 ஆக உள்ளது. 

முன்னதாக, ஏப்ரல் 19-ம் தேதி 13,644 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, சிகிச்சைப் பெற்று வருவோர் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டி 1,07,330 ஆக உயர்ந்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT