பெற்றோரைக் கொன்றவருக்கு 28 ஆண்டுகளுக்குப் பிறகு தண்டனை 
இந்தியா

பெற்றோரைக் கொன்றவருக்கு 28 ஆண்டுகளுக்குப் பிறகு தண்டனை

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் சுமார் 28 ஆண்டுகளுக்கு முன் தனது பெற்றோரை கொடூரமாகக் கொலை செய்த 65 வயது நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

DIN


காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் சுமார் 28 ஆண்டுகளுக்கு முன் தனது பெற்றோரை கொடூரமாகக் கொலை செய்த 65 வயது நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பளிக்க காலதாமதமானதற்கு, குற்றவாளி, மனநலம் பாதிக்கப்பட்டு 25 ஆண்டுகள் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது காரணமாகக் கூறப்படுகிறது.

காசர்கோடு கூடுதல் அமர்பு நீதிமன்ற நீதிபதி உன்னி கிருஷ்ணன் அளித்த தீர்ப்பில், 1993ஆம் ஆண்டு மார்ச் 22ல், தனது பெற்றோரைக் கொன்ற வழக்கில், கூலித் தொழிலாளியாக இருந்த சதாசிவம் குற்றவாளி என்று கூறினார்.

வானொலியில் சத்தத்தைக் குறைக்குமாறு, சதாசிவத்தின் தாய் கூறியதால் எழுந்த வாக்குவாதத்தில், சதாசிவம் கோடாரியை எடுத்து, தாய் மற்றும் தந்தையை வெட்டிக் கொன்றுள்ளார். இதனை, சதாசிவத்தின் மனைவி மற்றும் அப்போது 4 மற்றும் 5 வயதில் இருந்த அவரது பிள்ளைகளும் பார்த்துள்ளனர். இந்த வழக்கில் இவர்கள் முக்கிய சாட்சிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டு விசாரணைக்குள்படுத்தப்பட்ட சதாசிவம் மனநிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு 2018 வரை சிகிச்சை பெற்று குணமடைந்த பிறகுதான் விசாரணை தொடங்கி, தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT