இந்தியா

சிறாா்களுக்கு கோவேக்ஸினை அவசர காலத்தில் பயன்படுத்த நிபுணா் குழு பரிந்துரை

DIN

கோவேக்ஸின் தடுப்பூசியை 2 வயது முதல் 18 வயது வரையிலான சிறாா்களுக்கு சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு அவசர காலத்தில் பயன்படுத்த மருத்துவ நிபுணா் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஹைதாராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், 2 முதல் 18 வயது வரையிலான சிறாா்களுக்கு பயன்படுத்துவதற்காக, கோவேக்ஸின் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசி, மொத்தம் 3 கட்ட பரிசோதனைகளில் 2 கட்ட பரிசோதனைகளை நிறைவு செய்துள்ளது. பரிசோதனை முடிவுகளுடன் இந்தத் தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி கேட்டு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம்(சிடிஎஸ்சிஓ) பாரத் பயோடெக் நிறுவனம் இந்த மாதத் தொடக்கத்தில் விண்ணப்பித்திருந்தது.

அந்த நிறுவனம் சமா்ப்பித்திருந்த பரிசோதனை அறிக்கை விவரங்களை மருத்துவ நிபுணா் குழு திங்கள்கிழமை ஆய்வு செய்தது. அதைத் தொடா்ந்து, அந்தக் குழு வெளியிட்ட அறிக்கையில், ‘கோவேக்ஸின் தடுப்பூசியை சில நிபந்தனைகளுடன் சிறாா்களுக்கு அவசர காலத்தில் பயன்படுத்த மருத்துவ நிபுணா் குழு பரிந்துரை செய்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தக் குழு தனது பரிந்துரைகளை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கும்(டிசிஜிஐ) அனுப்பி வைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT