இந்தியா

கர்நாடகத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டரில் 3.6 எனப் பதிவு!

DIN

கர்நாடகத்தில் இன்று காலை 8 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

கர்நாடகத்தின் குல்பர்கா பகுதியில் இன்று காலை 8.06 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 எனப் பதிவாகி உள்ளது.

நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

கட்டிடங்களில் லேசான அதிர்வுகள் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர். இதனால் ஏற்பட்ட பொருள் சேதம் குறித்து தகவல் ஏதுமில்லை. 

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமையும் இப்பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதுக்கு சதிதான் காரணம் என ஒப்புக்கொண்ட அமித் ஷா: அதிஷி

குரங்கு பெடல் டிரெய்லர்

ஆதிதிருவரங்கத்தின் அதிசயங்கள்...

ஓடிடி ரிலீஸ்.......இந்த வார திரைப்படங்கள்!

இளஞ்சிவப்பில் தொலையும் மனம்..!

SCROLL FOR NEXT