முகப்பு
இந்தியா

புணேவில் பெண் ராணுவ அதிகாரி தற்கொலை

புணேவில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பெண் ராணுவ அதிகாரி புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 13 அக்டோபர், 2021 at 1:22 PM
கோப்புப்படம்
பகிர்:

புணேவில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பெண் ராணுவ அதிகாரி புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புணே அருகே உள்ள வான்வாடியில் ராணுவ நுண்ணறிவு பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு ராணுவம், விமானப்படை, கப்பற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

ஜெய்பூரில் பணிபுரியும் உத்தரகண்டை சேர்ந்த  43 வயதுடைய பெண் லெப்டினன்ட் கர்னல் அதிகாரி மூன்று மாத பயிற்சிக்காக புணே வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை அவரது தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து புணே காவல்துறையினர் தெரிவித்தது:

பெண் அதிகாரி மூன்று மாத பயிற்சிக்காக புணே வந்துள்ளார். இவரது கணவர் ராணுவத்தில் லெப்டினன்ட் பதவியில் இருக்கிறார். இவர்களின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. 

மேலும், பெண் அதிகாரி தற்கொலைக்கான கடிதம் ஏதும் எழுதி வைக்கவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.