முகப்பு
இந்தியா

காஷ்மீர்: தீவிரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரில் தேடுதலின் போது தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை.

Updated On : 13 அக்டோபர், 2021 at 3:55 PM
காஷ்மீர்: தீவிரவாதி சுட்டுக்கொலை
பகிர்:

காஷ்மீரில் தேடுதலின் போது தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை.

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதியை சுற்றி வளைத்த காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட பயங்கரவாதியை சுட்டுக்கொன்றனர்.

புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் ரகசியத் தகவல் கிடைத்ததும் காவல்துறையும் எல்லைப் பாதுகாப்புப் படையும் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளின் இருப்பை உறுதி செய்து சுற்றிவளைத்த காவல்துறையினரை சக்திவாய்ந்த ஆயுதத்தால் தாக்க முயற்சி செய்த தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். 

பலியான தீவிரவாதியின் பெயர் , தொடர்புடைய இயக்கம் எதுவும் தெரியவில்லை என்றும் தேடுதல் வேட்டை தொடரும் எனவும் காவல்துறை தரப்பில் கூறியிருக்கிறார்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.