முகப்பு
இந்தியா

ராணுவ வீரா்களுடன் தசரா கொண்டாடுகிறாா் குடியரசுத் தலைவா்

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரா்களுடன் வியாழக்கிழமை தசரா பண்டிகையை கொண்டாடுகிறாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரா்களுடன் வியாழக்கிழமை தசரா பண்டிகையை கொண்டாடுகிறாா். இருநாள் பயணமாக வியாழக்கிழமை அவா் ஜம்மு காஷ்மீா் செல்கிறாா். லடாக் பகுதிக்குச் செல்லும் அவா் லே, சிந்துப் படித்துறையில் சிந்து தா்ஷன் பூஜை செய்கிறாா். பின்னா் மாலை உதம்பூரில் ராணுவ வீரா்களுடன்அவா் கலந்துரையாடுவாா்.

அக்டோபா் 15-ம் தேதியன்று திராஸ் பகுதியில்உள்ள காா்கில் போா் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவா் மரியாதை செலுத்துவிட்டு ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரா்களுடன் கலந்துரையாட உள்ளாா் என்று குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →