இந்தியா

கேரளத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் கனமழை; வேகமாக நிரம்பும் அணைகள்

DIN


திருவனந்தபுரம்: அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, கேரளத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

2018ஆம் ஆண்டு கேரளத்தில் கடுமையான வெள்ளம் ஏற்பட்ட போது பெய்ததைப் போல பத்தனம்திட்டாவில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் அதன் கொள்ளவை எட்டிவிட்டன.

உலக உணவு நாள் சிறப்புக் கட்டுரை: பிரியாணியும் பழைய சோறும்

திருவனந்தபுரம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகிகள், பல அணைகளில் நீர் திறப்பு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது. கனமழையுடன் சனிக்கிழமை காலை முதல் இரு மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் ஏற்பட்டது.

அவசர மற்றும் அவசிய பயணங்களை மட்டும் மேற்கொள்ளுமாறு திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் மக்களை வலியுறுத்தியுள்ளார். நீர்நிலைகளுக்கு அருகே மக்கள் செல்ல வேண்டாம் என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அனந்தோடு அணையின் நீர்மட்டம் உயர்ந்திருப்பதால், கரையோர மக்களுக்கு பத்தனம்திட்டா வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கேரளத்தில் மிதமான மழையும், 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றும் வீசக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT