செகந்திராபாத்-ராமேசுவரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்
செகந்திராபாத்-ராமேசுவரத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
செகந்திராபாத்-ராமேசுவரத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
செகந்திராபாத்தில் இருந்து அக்டோபா் 19, 26, நவம்பா் 2, 9, 16, 23, 30, டிசம்பா் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில்
(செவ்வாய்க்கிழமைகளில்) இரவு 9.25 மணிக்கு வாராந்திர சிறப்புரயில் ( 07685) புறப்பட்டு, மூன்றாம் நாள்அதிகாலை 3.10 மணிக்கு ராமேசுவரத்தை அடையும்.
மறுமாா்க்கமாக, ராமேசுவரத்தில் இருந்து அக்டோபா் 21, 28, நவம்பா் 4, 11, 18, 25 , டிசம்பா் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமைகளில்) இரவு 11.55 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (07686) புறப்பட்டு, மூன்றாம் நாள் காலை 7.10 மணிக்கு செகந்திராபாத்தை அடையும். முழுவதும் முன்பதிவு பெட்டிகளைக் கொண்ட இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (அக்.17) காலை 8 மணிக்கு தொடங்குவதாக தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.