பாஜக மீண்டும் ஆட்சியமைக்காது: பாஜகவை சேர்ந்தவர் கருத்து 
இந்தியா

பாஜக மீண்டும் ஆட்சியமைக்காது: பாஜகவை சேர்ந்தவர் கருத்து

விவசாயிகளின் கோரிக்கைகளை பாஜக நிறைவேற்றாவிட்டால் மீண்டும் பாஜக ஆட்சியமைக்காது என்று அக்கட்சியை சேர்ந்தவரும் மேகாலயா ஆளுநருமான சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். 

DIN


விவசாயிகளின் கோரிக்கைகளை பாஜக நிறைவேற்றாவிட்டால் மீண்டும் பாஜக ஆட்சியமைக்காது என்று அக்கட்சியை சேர்ந்தவரும் மேகாலயா ஆளுநருமான சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அவர் மேலும் பேசியது, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.  

குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்தால் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டிறுதி முதல் விவசாயிகள் பல்வேறு வகையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்புரி பகுதியில் பாஜகவினரால் விவசாயிகள் கொல்லப்பட்டதைக் கண்டித்தும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிஸாவில் இருந்து உதகைக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

வீடு வீடாக வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

காங்கேயம் கல்வி நிறுவனத்தில் ரூ.1.33 கோடி மதிப்பில் கல்வி ஊக்கத் தொகை

காங்கயம், உடுமலையில் இன்று மின்பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 103 அடியை நெருக்குகிறது

SCROLL FOR NEXT