இந்தியா

கேரளத்தில் வெள்ளம்: சமையல் பாத்திரத்தில் மிதந்து சென்று திருமணம் புரிந்த தம்பதி

DIN

கேரளத்தில் தொடர் மழை பெய்து சாலைகளில் தண்ணீர் தேங்குவதால், ஆழப்புலாவில் புதுமணத் தம்பதிகள் பாத்திரத்தில் அமர்ந்தவாறு மண்டபத்திற்கு சென்றனர்.

கேரள மாநிலத்தில் பருவமழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆழப்புலா மாவட்டத்தில் புதுமணத் தம்பதி உணவு சமைக்கும் ராட்சத அலுமினிய பாத்திரத்தில் அமர்ந்து மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

குதிரை வண்டி, கார் போன்றவற்றில் புதுமனத் தம்பதி அழைப்பு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கேரளத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக உணவு சமைக்கும் பாத்திரத்தில் அமர வைத்து தம்பதியை திருமண வீட்டார் அழைத்துச் சென்றனர். 

பின்னர் மண்டபத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் தம்பதிகளில் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT